தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி - மத்திய அரசு

வரும் 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு நாடு முழுவதும் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இலவச பூஸ்டர் தடுப்பூசி
இலவச பூஸ்டர் தடுப்பூசி

By

Published : Jul 13, 2022, 5:55 PM IST

Updated : Jul 13, 2022, 8:49 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க , இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும் என்ற சூழல் இருந்தது.

இந்த நிலையில் டில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்பட இருக்கிறது; நாடு முழுவதும் இதுவரை 199 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 13, 2022, 8:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details