தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் இலவசமாக ஆயுஷ் 64 மருந்து விநியோகம்! - Free AYUSH 64 medicine

டெல்லியில் ஆயுஷ் 64 மருந்து இலவசமாக விநியோகம் செய்ய ஏழு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Free AYUSH 64 medicine in 7 areas of Delhi from Monday  ஆயுஷ் 64 மருந்து  ஆயுஷ் மருந்து  கரோனா மருந்து  Free AYUSH 64 medicine i  Corona Vaccine
Free AYUSH 64 medicine

By

Published : May 10, 2021, 6:37 AM IST

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத கரோனா நோயாளிகளுக்கு, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆயுஷ் 64 மருந்தை இலவசமாக வழங்கும் பணி நேற்று (மே. 9) தொடங்கியது. இந்தத் திட்டம் இன்று (மே.10) முதல் மேலும் பல மையங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் அல்லது அரசு/அரசு சாரா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தனிமைப்படுத்தும் மையங்களில் இருப்பவர்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் இந்த முன்முயற்சியால் பயனடையலாம். அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுஷ் 64 மருந்தை வழங்குவதற்காக டெல்லியில் ஏழு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நோயாளிகள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவையும், ஆதார் அட்டையையும் பயன்படுத்தி ஆயுஷ் 64 மாத்திரைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.‌ இதுதவிர ஆயுஷ் பவன் வளாகத்தின் வரவேற்பு கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விற்பனை அரங்கிலும் ஆயுஷ் 64 மற்றும் ஆயுரக்ஷா கிட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க:18-45 வயதை சேர்ந்த 14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

ABOUT THE AUTHOR

...view details