தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்முவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப் படையினர் அதிரடி - ஜம்மு பயங்கரவாத தாக்குதல்

ஜம்முவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்முவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்முவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

By

Published : Dec 28, 2022, 8:37 PM IST

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் வாகனத் தணிக்கை போன்ற பாதுகாப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சித்ராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைந்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 7:30 மணியளவில், பாதுகாப்புப் படையினர் சம்பவயிடத்துக்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த மினி லாரியை கண்டு அருகில் சென்றனர்.

அப்போது வாகனத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டனர். பின்னர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து வாகனத்தைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே தாக்குதல் நடந்தது.

இதில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களது அடையாளங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இதில், தப்பி ஓடிய வாகன ஓட்டியை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படங்க: Leena Nagvanshi: துனிஷா சர்மாவை தொடர்ந்து லீனா நாக்வன்ஷி மரணம்!

ABOUT THE AUTHOR

...view details