ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில்(Kulgam encounter) உள்ள பொம்பை, கோபால்புரா ஆகிய கிராமங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் மோதல் வெடித்தது.
இதில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல் தலைவர் விஜய் குமார்(IGP Kashmir Vijay Kumar) தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டைத் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம், துணை ராணுவம் ஆகிய மூவரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த மோதல் வெடித்துள்ளது. கொல்லப்பட்ட நால்வரில் TRF(The Resistance Front) பயங்கரவாத அமைப்பின் கமான்டரும் ஒருவர்.
இது தொடர்பாக விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என ராணுவத் தரப்புத் தெரிவித்துள்ளது. இரு நாள்களுக்கு முன்னர் ஹைதர்பூரா பகுதியில் நடைபெற்ற மோதலில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க:சொல்லாமல் சென்றதற்கு மன்னியுங்கள் - தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்