கர்நாடகா: ஹாசன் மாவட்டம், ஹோலி நரசிபுரா தாலுகாவில் உள்ள மரகௌதனஹள்ளி கிராமத்தில், நிலத்தகராறு காரணமாக நான்கு பேர் கொல்லப்பட்டனர். மே 24ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், மற்றொரு தரப்பில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
தகவலறிந்த காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரதீபா, யோகேஷ், ரவி, சச்சின், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று பதிவு செய்யப்பட்ட காணொலி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:திருப்பதி லட்டு டோர் டெலிவரி போலி விளம்பரம்: இணையதளம் மீது வழக்கு பதிவு