ராஜஸ்தான் மாநிலம் நர்னாடி- பாண்டு பகுதியில் நேற்று (ஏப்ரல் 28) இரவு காரும்- டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சிக்கி காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு - ராஜஸ்தான் மாநில செய்திகள்
ராஜஸ்தான்: நர்னாடி- பாண்டு பகுதியில் கார் மீது டிரக் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விபத்தில் சிக்கிய தந்தை, மகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருப்பினும் இருவரும் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய நான்கு பேரின் உடல்களும், உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.