போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சிதி மாவட்ட பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை எட்டு மணிக்கு சுமார் 54 பயணிகளுடன் சத்னா பகுதிக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிதி மாவட்டத்திலுள்ள ஆற்றைக் கடக்க முற்பட்டபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கால்வாயில் விழுந்த பேருந்து: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு - கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த பேருந்து
மத்தியப் பிரதேசத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பேருந்து ஆற்றை ஒட்டியுள்ள கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. விபத்து குறித்து தகவலறிந்த கட்டுப்பாட்டுத் துறையினர் விரைவில் சம்பவ இடம் விரைந்தனர்.விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, ஒரு குழந்தை, 16 பெண்கள் உள்பட பேருந்தில் பயணித்த 39 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட சுமார் 10 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.