தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆறாவது திருமணம் செய்த முன்னாள் அமைச்சர்- மனைவி பகீர் புகார்! - சௌத்ரி பஷீர்

ஆறாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

UP minister booked
UP minister booked

By

Published : Aug 2, 2021, 4:51 PM IST

Updated : Aug 2, 2021, 5:09 PM IST

ஆக்ரா : உத்தரப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் சௌத்ரி பஷீர். இவர் மீது அவரது மனைவி நக்மா என்பவர் மண்டோலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், “தனது கணவரும் முன்னாள் அமைச்சருமான சௌத்ரி பஷீர், சைஸ்டா என்ற பெண்ணை ஆறாவதாக திருமணம் செய்துகொண்டார் என்று செய்தியறிந்தேன்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் என்னை தாக்கி காயம் ஏற்படுத்தினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனக்கும் பஷீருக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து எனது கணவரும், மைத்துனியும் என்னை கொடுமைப்படுத்திவருகின்றனர். நான் இவர்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்றார்.

பெண் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் சௌத்ரி பஷீர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைச் சட்டம் 2019 உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முத்தலாக் கூறிவிட்டு, பணம் கொடுத்து குழந்தையை அபகரிக்க முயற்சி!

Last Updated : Aug 2, 2021, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details