தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லஞ்சப் புகாரில் சிக்கிய திகார் சிறையின் முன்னாள் டி.ஜி.பி. சஸ்பெண்ட்

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் பாதுகாப்பு வழங்க பணம் வாங்கியதாக எழுந்த புகாரில் முன்னாள் திகார் சிறைச்சாலையின் டி.ஜி.பி. சந்தீப் கோயலை பணியிடை நீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சுகேஷ்
சுகேஷ்

By

Published : Dec 22, 2022, 10:58 PM IST

டெல்லி:தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதான மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் பாதுகாப்பு மற்றும் போதிய வசதிகளை வழங்க திகார் சிறையின் டி.ஜி.பி சந்தீப் கோயலுக்கு, 12 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் சுகேஷ் சந்திரசேகர் வழங்கியதாகப் புகார் எழுந்தது.

மேலும் திகார் சிறையில் இருந்த டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திகார் சிறையின் டி.ஜி.பி பொறுப்பில் இருந்து சந்தீப் கோயல் நீக்கப்பட்டார்.

முன்னதாக, எழுந்த புகார்களைத் தொடர்ந்து மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சந்தீப் கோயலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப் கோயல், 1989ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

இதையும் படிங்க:ரூ.10 லட்சம் கேட்டு அதிகாரி வீட்டின்முன் போஸ்டர் ஒட்டி கொலை மிரட்டல்

ABOUT THE AUTHOR

...view details