டெல்லி: பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் ஆசாத் ரவூப், லாகூரில் மாரடைப்பு காரணமாக தனது 66ஆவது வயதில் உயிரிழந்தார். 2000 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக முதல்முறையாக ரவுஃப் தோன்றினார்.
அவர் 64 டெஸ்ட் போட்டிகளில் (49 ஆன்-பீல்டு அம்பயராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச டி-20 போட்டிகளில் நடுவராக இருந்தார்.
நடுவராக பதவியேற்பதற்கு முன் நேஷனல் வங்கி மற்றும் ரயில்வேக்காக 71 முதல் தர போட்டிகளில் விளையாடிய ரவூப், ஏப்ரல் 2006 இல் ஐசிசி எலைட் பேனலில் நியமிக்கப்பட்டார். சகநாட்டவரான அலீம் டாருடன், பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக ஆனார்.