டெல்லி:ஆண்டுதோறும், 20 மொழிகளின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது, யுவ புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2020ஆம் ஆண்டுக்கான கன்னட மொழிக்கான சாகித்ய அகாடமி விருது, கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வீரப்ப மொய்லியின் கன்னட மொழி கவிதை தொகுப்பான "பாகுபலி அஹிம்சா திக்விஜயம்" நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்ப மொய்லிக்கு சாகித்ய அகாடமி விருது - வீரப்ப மொய்லி
இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் 20 மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு நேற்று (மார்ச் 12) அறிவிக்கப்பட்டன. கன்னட மொழியில் சாகித்ய அகாடமி விருது வீரப்ப மொய்லிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
former-karnataka-cm-veerappa-moily-win-sahitya-akademi-award
மேலும், தமிழில் எழுத்தாளர் இமையத்தின் "செல்லா பணம்" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதும், கவிஞர் சக்தி எழுதிய "மரநாய்" கவிதை தொகுப்புக்கு யுவ புரஸ்கார் விருதும் சாகித்திய அகாடமியால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது