ராஜஸ்தான்: முன்னாள் காங்கிரஸ் தலைவரின் 21 வயது மகள் நேற்று (நவ.21) காய்கறி வாங்கச் சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் கோபால் கேஷாவத், மகள் அபிலாஷா தனது ஸ்கூட்டரில் காய்கறிகள் வாங்க சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, தனது தந்தையை போனில் அழைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை துரத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன மகள் குறித்து கோபால் கேஷாவத் பிரதாப் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி பஜன் லால், அந்தப் பெண்ணின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது; இன்று காலை விமான நிலைய சாலையில் பெண்ணின் ஸ்கூட்டர் கண்டெடுக்கப்பட்டது என்று கூறினார்.