டெல்லி: இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். தலைமை தேர்தல் ஆணையருடன் இணைந்து இரு ஆணையர்கள் பணியாற்றுவார்கள். தேர்தல் ஆணையராக அனுப் சந்த்ரா பாண்டே உள்ள நிலையில், காலியாக இருந்த மற்றொரு ஆணையர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலை கடந்த சனிக்கிழமை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் இன்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய கனரக தொழில்துறை செயலாளராக அருண் கோயல் பதவி வகித்தார். வரும் டிசம்பர் இறுதியில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்றார்.