டெல்லி:கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த குல்தீப் செங்கார் பாலியல் வன்புணர்வு செய்தார்.
அவர் மீதான புகார் விசாரணையில் இருந்தபோது, 2019ஆம் ஆண்டு ஜூலையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் பயணம் செய்த கார் மீது சரக்கு வண்டி (Truck) மோதியது.
மேல்முறையீடு
இந்த விபத்தில் சிறுமியின் குடும்பத்தினர் இருவர் உயிரிழந்தனர். சிறுமி பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார். அதன் பின்னர், குல்தீப் செங்கார் உள்பட 13 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் 20இல் பாலியல் வன்புணர்வு வழக்கு விசாரணை முடிவில், குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த தீர்ப்பை குல்தீப் மேல்முறையீடு செய்தார்.
குற்றவாளி
பின்னர், சிறுமி கார் மீது சரக்கு வண்டி மோதிய விபத்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த விபத்து குல்தீப் சிங் செங்கார் திட்டமிட்டு நடத்திய விபத்து என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சிபஐ தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நேற்று (டிசம்பர் 20) தீர்ப்பு வழங்கியது. அதில், பாதிக்கப்பட்ட சிறுமி, வழக்கறிஞர், குடும்பத்தினர் ஆகியோர் சென்றுகொண்டிருந்த கார் விபத்து குல்தீப் சிங் செங்காரால் திட்டமிடப்பட்டது எனக் கூறி, அவரை இந்த வழக்கிலும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாய் குட்டிகளுடன் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை