அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சிராலாவில் முன்னாள் அமைச்சரும், மருத்துவருமான பாலேட்டி ராமராவ் வசித்துவருகிறார். இவர் தனது 12ஆவது நினைவு தினத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று விசாரிக்கையில், தான் 75 ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டதாகவும், இப்போது 63 வயதை கடந்துவிட்டதால் மீதம் இருக்கும் 12 ஆண்டுகளை நினைவில் கொள்ள உயிருடன் இருக்கும் போதே நினைவு நாளைக் கொண்டாட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உயிருடன் இருக்கும் போதே நினைவு நாளை கொண்டாடும் முன்னாள் அமைச்சர் - நினைவு நாளை கொண்டாடும் முன்னாள் அமைச்சர்
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் உயிருடன் இருக்கும் போதே நினைவு நாளைக் கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதற்கான காரணம் வியப்படைய செய்கிறது.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் குழப்பத்துடன் இருக்கின்றனர். இதுகுறித்து பாலேட்டி ராமராவ் கூறுகையில், நான் எவ்வளவு காலம் வாழ வேண்டும், எவ்வளவு காலம் வாழ்ந்தேன். இன்னும் எவ்வளவு காலம் வாழ்வேன் என்பதை எண்ணியே நினைவு நாளைக் கொண்டாட திட்டமிட்டேன். 75 ஆண்டுகல் வாழ வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது 63 வயதாகிறது. 75ஆவது பிறந்த நாள் வரை நினைவு தினத்தை கொண்டாடுவேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஷாம்பூவால் நின்ற திருமணம்... காரணம் கேட்டு மிரண்ட மணப்பெண் வீட்டார்...