பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நாளை (நவ.10) வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
'எனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, வாக்கு எண்ணிக்கையில் விழிப்புடன் இருங்கள்' - ராஷ்டிரிய ஜனதா தள
பாட்னா: எனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, வாக்கு எண்ணிக்கையில் விழிப்புடன் இருங்கள் என ராஷ்டிரிய ஜனதா தள முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
tejashwi
இதனிடையே ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று (நவ. 10) தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுகுறித்து அவர், "எனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளேன். ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்கள் வீட்டிலேயே தங்கி தங்களது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். வாழ்த்துவதற்காக வீட்டிற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாற்றத்திற்காக வாக்களியுங்கள்- தேஜஷ்வி யாதவ்