தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாமில் 372 கிராம் ஹெராயின் பறிமுதல்: 5 பேர் கைது - ஹந்தர் வெங்

அசாம்: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களால் 372 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

அசாமில் 372கிராம் ஹெராயின் பறிமுதல்
அசாமில் 372கிராம் ஹெராயின் பறிமுதல்

By

Published : Apr 8, 2021, 11:30 AM IST

Updated : Apr 8, 2021, 11:52 AM IST

அசாமில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களால் நேற்று (ஏப்.7) 372 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்பாக மாநில தலைநகரின் இரண்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (ஏப் 6) ஹந்தர் வெங் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 33.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 75 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சோகாவ்தார் கிராமத்தின் மியான்மர் எல்லையில், ஒரு கோடிக்கும் அதிக மதிப்பிலான 297.1 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் போதைப் பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறைத்தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாட்டில் புதிய உச்சம் தொட்ட கரோனா

Last Updated : Apr 8, 2021, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details