பெங்களூரு:கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள பண்டர் துறைமுகத்தில் மீனவர் ஒருவரை சக மீனவர்கள் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு அடித்து சித்ரவதை செய்கின்றனர். இதுகுறித்து வெளியான காணொலி பெரும் அதிர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மங்களூரு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில், பாதிக்கப்பட்ட மீனவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர், சக மீனவர்களுடன் மங்களூரு கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது இவர் செல்போனை திருடிதாக கூறப்படுகிறது.