சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஜூன் 10ஆம் தேதி தென்படவுள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தக் கிரகணத்தை வடஇந்தியாவில் உள்ள காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம் போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியுமாம். இந்தியா தவிர, இந்த முதல் சூரிய கிரகணத்தின் தாக்கம் அமெரிக்கா, ஐரோப்பா, கிரீன்லாந்து, ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளில் அதிகளவில் இருக்கக்கூடும். கிரகணம் நிகழும் இடங்களில் உள்ள மக்கள், சூரியனை இருட்டாகப் பார்ப்பார்கள் எனக் கூறப்படுகிறது.