தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான் எக்ஸ்இ வைரஸ் கண்டுபிடிப்பு! - ஒமைக்ரான் எக்ஸ்இ

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று கரோனா வைரஸின் அதிவேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் எக்ஸ்இ (Omicron XE) மாறுபாட்டின் முதல் பாதிப்பு இதுவாகும்.

Omicron XE
Omicron XE

By

Published : Apr 6, 2022, 7:18 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் புதிய வகை வைரஸ் (ஒமைக்ரான் எக்ஸ்இ-Omicron XE) கண்டறியப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று கரோனா வைரஸின் அதிவேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் எக்ஸ்இ (Omicron XE) மாறுபாட்டின் முதல் பாதிப்பு நாட்டில் புதன்கிழமை (ஏப்.6) கண்டறியப்பட்டது.

ஒமைக்ரான் எக்ஸ்இ வகை கரோனா வைரஸ் என்பது ஒமைக்ரான் வகைகளின் BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றின் பிறழ்வு ஆகும். மேலும் இது "மறுசீரமைப்பு" என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆரம்பகால அறிகுறிகளின்படி, இந்த மாறுபாடு மற்ற ஓமைக்ரான் வகைகளை விட குறைந்தது 10 சதவீதம் அதிகமாக பரவுகிறது.

இது, 376 மாதிரிகளின் மரபணு வரிசைமுறையில் முடிவுகள் வந்ததாக அலுவலர் கூறினார். மும்பையில் இருந்து எடுக்கப்பட்ட 230 மாதிரிகளில், 228 மாதிரிகள் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தவை, ஒன்று கப்பா மாறுபாடு மற்றும் மற்றொரு XE வகை எனக் கண்டறியப்பட்டது.

இதற்கிடையில் ஆறுதலாக வைரஸின் புதிய வகையினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை மோசமாக இல்லை என்று சுகாதார அலுவலர் கூறினார்.

இதையும் படிங்க : ஒமைக்ரானை ஒழிக்க வேப்ப மரத்திற்குத் திருமணம் செய்துவைத்த கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details