தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பறவைக் காய்ச்சல் - பலியான 12 வயது சிறுவன்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் உயரிழந்தான். இது இந்த ஆண்டில் பறவைக் காய்ச்சலால் ஏற்படும் முதல் உயிரிழப்பு .

first-bird-flu-death-in-country-this-year-reported-in-aiims-delhi
பறவைக் காய்ச்சல் - நாட்டில் முதல் பலியான 12 வயது சிறுவன்

By

Published : Jul 21, 2021, 7:31 AM IST

டெல்லி:லுகோமியா, நிமோனியா ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சிறுவன் தொற்றுக்குள்ளான ஹெச்5என்1 என்னும் வைரஸ் மனிதர்களை அரிதாகவே பாதிக்கும். இருப்பினும், அவ்வகை தொற்று பாதிக்கப்பட்டால் , உயிரிழப்பு விகிதம் 60 விழுக்காடு ஆகும். ஹெச்5என்1 எனும் வைரஸ் கடுமையான காய்ச்சலையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.

"ஹெச்5என்1 வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இந்த வைரஸ் மனிதர்களை எளிதில் பாதிக்காது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள், மேலும் ஒருவர் மூலம் மற்றவருக்கு பரவுவது அசாதாரணமானது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

பறவைகளின் எச்சம், மலம் ஆகியவை மூலம் இவ்வகை வைரஸ் வெளிப்படும். இது, மனிதர்களின் மூக்கு,கண், வாய் ஆகியவற்றில் பட்டால் வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடலாம்" என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வலசை பறவைகளும் காரணம்' - மூத்த விஞ்ஞானி கருத்து

ABOUT THE AUTHOR

...view details