ஆந்திராவில் வீடு கட்டுவதற்காக தோணிய குழியில் பாம்பு தென்பட்டதை வீட்டின் உரிமையாளர் கண்டார். இதையடுத்து, பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் பாஸ்கருக்கு தகவல் கொடுத்தார்.
குழி தோண்டும் போது மண்ணுக்குள் தென்பட்ட நாகப்பாம்பு மீட்பு - நாகப்பாம்பு மீட்பு
அமராவதி: வீடு கட்டுவதற்காகத் தோண்டிய குழியில் இருந்த நாகப்பாம்பை மீட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மலையில் விடப்பட்டது.
பாஸ்கர் புத்திசாலித்தனமாக உயிர்சேதமின்றி பாம்பைப் பிடித்தார். ஆனால் குழியில் இருந்த பாம்பைப் பிடிக்கும் போது அதற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து நாகப்பாம்பை உள்ளூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். அங்கு மருத்துவ ஊழியர்கள் இல்லாததால், படேருவில் உள்ள ஒரு முதன்மை பராமரிப்பு மையத்திற்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தார்.
அதன் பின்னர் பாம்பின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து வைத்து கட்டப்பட்டது. சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னர் அந்த பாம்பு மினுமுலுரு மலையில் விடப்பட்டது.