தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து...50 பேரை காப்பாற்றிய ஓட்டுநர்! - andhra bus fire accident

அமராவதி: ஆந்திராவில் தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 50 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

ஆந்திரா
ஆந்திரா

By

Published : Feb 9, 2021, 6:27 PM IST

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் - பயகாரோபேட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒடிசாவிலிருந்து எஸ்என்ஜி தொழிற்சாலைக்கு 50 தொழிலாளர்கள் தனியார் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

பேருந்து பயகாரோபேட்டா அருகே சென்று கொண்டிருக்கையில், திடீரென டையர் வெடித்ததில் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது

நிலைமையை புரிந்துக்கொண்ட ஓட்டுநர், உடனடியாக பேருந்தை சாலையோரமாக நிறுத்தி பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு, தானும் வெளியேறினார். அதற்குள் பேருந்து முழுவதும் தீப்பிடித்து, புகை மண்டலமாக காட்சியளித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையும் படிங்க:வேகமாக வந்த பேருந்தின் டயரில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details