தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜபல்பூர் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு - fire accident in mp

மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

fire-breaks-out-at-private-hospital-in-jabalpur-madhya-pradesh
fire-breaks-out-at-private-hospital-in-jabalpur-madhya-pradesh

By

Published : Aug 1, 2022, 4:53 PM IST

Updated : Aug 1, 2022, 6:29 PM IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 1) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை அலுவலர்கள் உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே போலீசார் மருத்துமனையில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:டெல்லியில் 2 பேருக்கு குரங்கம்மை அறிகுறி

Last Updated : Aug 1, 2022, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details