தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செக் மோசடி: தோனி மீது வழக்குப்பதிவு

பிகாரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட 8 பேர் மீது காசோலை மோசடி செய்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது.

தோனி மீது வழக்குப்பதிவு!- செக் மோசடி புகார்?
தோனி மீது வழக்குப்பதிவு!- செக் மோசடி புகார்?

By

Published : May 31, 2022, 9:57 AM IST

பிகார்:டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரோடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு வழங்கிய ரூ. 30 லட்சம் மதிப்புள்ள காசோலை செல்லுப்படியாகவில்லை என மோசடி புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரை தொடர்ந்து வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்ததால் இவ்வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (மே 30) இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேல் விசாரணையை மாஜிஸ்திரேட் அஜய் குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. இதனையடுத்து அவர் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, இவ்வழக்கு விசாரணையில், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது தெரியவந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, 30 லட்சம் மதிப்புள்ள உரம் தயாரிக்கப்பட்டு டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்யப்பட்டது.

ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை. அதிக அளவு உரம் விற்கப்படாமல் உள்ளதால், நியூ குளோபல் நிறுவனம் மீதமுள்ள உரங்களை திரும்பப் பெற்றது. அதற்கு பதிலாக 30 லட்சம் காசோலையையும் வழங்கியது. ஆனால், காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது, அது செல்லுபடியாகவில்லை.

இதுதொடர்பாக, நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், பதிலளிக்காமலும் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து, டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா வழக்கு தொடர்ந்துள்ளார். நியூ குளோபல் நிறுவனத்தின் தலைவர், கிரிக்கெட் வீரர் தோனி, தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உள்பட 8 பேரின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் நிரபராதி

ABOUT THE AUTHOR

...view details