தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்த அக்ஷய் குமார்! - அக்ஷய் குமார்

உத்தரகாண்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்ற அக்ஷய் குமார் அங்குள்ள கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்துள்ளார். பிரார்த்தனையின்போது கோயிலில் குவிந்த ரசிகர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 23, 2023, 5:25 PM IST

உத்தரகாண்ட்: திரைப்படங்களின் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் உத்தரகாண்டிற்கு படப்பிடிப்பிற்காக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சென்றுள்ளார். அவருடன் அந்தப் படத்தில் பணிபுரியும் அனன்யா பாண்டேவும் உத்தரகாண்டு சென்றடைந்துள்ளார். அக்‌ஷய் குமார் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை உத்தரகாண்டின் பல்வேறு மலைப்பகுதிகளில் சுமார் இரண்டு வாரங்கள் எடுப்பர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்ஷய் குமார் மே 18ஆம் தேதி அன்று டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையத்திற்கு சிறப்பு வாடகை விமானத்தில் வந்தடைந்தார். அந்த நேரத்திலும், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது, ​​அக்ஷய் குமார் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து, அக்ஷய் குமார் கேதார்நாத் கோயிலில் பிரார்த்தனை செய்துள்ளார். பிரார்த்தனையின் போது கோயிலில் குவிந்த ரசிகர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதற்கு முன்னர் சஸ்பென்ஸ் திரில்லர் படமான ‘கத்புட்லி’ படத்தின் படப்பிடிப்பும் உத்தரகாண்டில் நடந்தது. அப்போது படத்தின் ஷூட்டிங் லோகேஷனாக ஹிமாச்சலை காட்டுவது சர்ச்சையானது. மேலும், அதில் அக்ஷய் குமார் காவல் அதிகாரியாக நடித்தார்.

அக்ஷய் குமார் 9 செப்டம்பர் 1968இல் பிறந்தார். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அக்ஷய் குமார் மிஸ்டர் கிலாடி அல்லது கிலாடி குமார் என்றும் அழைக்கப்படுகிறார். உண்மையில் அக்ஷய் குமார் கிலாடி சீரிஸின் பலவற்றை இயக்கியவர். அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. கிலாடி, சப்சே படா கிலாடி, மைன் கிலாடி தூ அனாரி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிலாடி மற்றும் கிலாடி கா கிலாடி ஆகியவை அக்ஷய்யின் கிலாடி தொடர் படங்களில் அடங்கும்.

இதையும் படிங்க:கோவையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் முதல் லைவ் கான்செர்ட்!

ABOUT THE AUTHOR

...view details