கோழிக்கோடு: கேரள மாநிலம், தாமரசேரி பேருந்து நிலையத்தில் 15 வயது சிறுமி, காதலனின் கையை அறுத்து, பின்னர் தானும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
தாமரசேரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக இருவரும் காத்திருந்துள்ளனர். அப்போது திடீரென கத்தியை எடுத்த சிறுமி காதலனின் கையை அறுத்துள்ளார். பின்னர், தன்னைத் தானே வெட்டிக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு தாமரசேரி தாலுகா மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். இருவரின் உடல் நிலை சீராக இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'கோடஞ்சேரியில் வசிக்கும் இளைஞர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், தங்கள் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்புத்தெரிவித்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது’ என்றனர்.
இதையும் படிங்க:காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: கைதான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!