ஹரியானா மாநிலத்தில் கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடந்த நான்கு நாள்களில் சிகிச்சை பலனின்றி 101 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
குருகிராமைச் சேர்ந்த மூவர், பாரிபாத்தில் இரண்டு பேர், ஹிசாரில் 20 பேர், கர்னலில் ஒருவர், பானிபட்டில் மூவர், ரேவாரியில் நான்கு பேர், சிர்சாவில் ஒருவர், ஜஜ்ஜாரில் ஒருவர், பதேஹாபாத்தில் இருவர் என நேற்று (நவ.14) ஒரே நாளில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேற்று (நவ.14) ஒரே நாளில் 2 ஆயிரத்து 688 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 19 ஆயிரத்து 538 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைப் போலவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் உயர்ந்துள்ளது. நேற்று (நவ.14) மட்டும் 2 ஆயிரத்து 115 பேர் கரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 368 ஆக உயர்ந்துள்ளது. ஹரியான மாநிலத்தில் கரோனா குணமடைபவர்களின் விகிதம் 89.11 விழுக்காடாக உள்ளது.
இதையும் படிங்க:டிசம்பருக்குள் 10 கோடி கரோனா தடுப்பூசி!