ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க முற்பட்டால் ஃபாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகளிடம் இருந்து இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் முறை ஃபாஸ்டேக் திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்மூலம், நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் கடந்து செல்லலாம். பண பரிவர்த்தனை இன்றி மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் ஃபாஸ்டேக் முறை 2016ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது ஃபாஸ்டேக் முறை ஃபாஸ்டாக் ஸ்டிக்கரை பெறுவது எப்படி என்று கீழே உள்ள இணைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு:பயனர்கள் எவ்வாறு ஃபாஸ்டேக் ஸ்டிக்கரைப் பெறுவது, அதனை ரீசார்ஜ் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்...