குஜராத்:'ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்'... என்ற பழமொழிக்கேற்ப உடல் ஆரோக்கியத்தில் பெரிதளவில் பங்கு வகித்து வரும் நெய்யின் மூலம் குஜராத்தில் ஒருவர் கோடீஸ்வரராக வலம் வருவது அனைவர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக பழக்க வழக்கத்தில் தமிழர்களின் உணவுமுறை தனிச்சிறப்பு பெற்று வருகிறது. வாழை இலை சாப்பாட்டில் தொடங்கி, எந்த உணவாக இருந்தாலும் அதில் நெய் விட்டு உண்ணும் முறை தொன்றுதொட்டு இன்றுவரை இந்தியர்களின் தனித்துவமான பழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் உணவில் நெய் சேர்த்து உணவருந்தும் பழக்கம் வெகுவாக தென்கிழக்கு ஆசிய கண்டனங்களில் மட்டுமே அதிகளவில் பயன்பாட்டில் இருக்கிறது. நெய் மற்றும் அதில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு உலகம் முழுதும் தனி மரியாதையே உண்டு.
இப்படி இத்தனை தனிச்சிறப்பு பெற்ற பசுவின் நெய் மூலம், குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் ஆண்டுக்கு 10கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார். பசுவின் நெய்யை பல்வேறு தன்மைகளில், பல்வேறு பொருட்களாகவும் உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் இவர், பலருக்கும் முன்னோடியாக இருந்து வருகிறார்.
குஜாரத்தைச் சேர்ந்த ரமேஷ்பாய் ரூபாரேலியா என்னும் விவசாயி பசு மாடுகளை பராமரித்து அதன் மூலம் வரும் பாலைக் கொண்டு தொழில் செய்து வருகிறார். அவர் வளர்க்கும் பசு மாடுகளில் இருந்து பெறும் பால்களில் இருந்து சுத்தமான நெய்-யை உருவாக்கி அதனை விற்பனை செய்து வருகிறார். உலகளவில் ரமேஷ்பாயின் கலப்படம் இல்லாத நெய் பொருட்களுக்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது.
நெய் விற்பனை தவிர்த்து, பசும்பாலில் இருந்து பெறப்படும் நெய்யினை மூலப்பொருளாகக் கொண்டு முகங்களுக்கு பயன்படுத்தப்படும் க்ரீம்களாக விற்பனை செய்து வருகிறார். அவரது மாடுகளில் இருந்து பெறப்படும் சுமார் 31 லிட்டர் பால்களை பல்வேறு மூலிகை குணம் நிறைந்த பொருட்கள் சேர்த்து 1கிலோ நெய் கிடைக்கும் அளவிற்கு நன்றாக சுண்டக்காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்.
குங்குமப்பூ, மஞ்சள், ரோஸ் இதழ்கள், செம்பருத்தி போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை அந்தப் பாலில் இருந்து சுத்தமாக திரித்து எடுக்கப்பட்ட நெய்யுடன் சேர்த்து முகங்களுக்கு பயன்படுத்தும் பொருட்களாகவும் தயார் செய்து விற்பனை செய்கிறார். இதனைப் பயன்படுத்துவதால், முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பரு, தோலில் ஏற்படும் பிரசனைகள் போன்ற பல பிரச்னைகளை கட்டுபடுத்த உதவுகிறது.
பரவலாக 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சாதரண நெய்கள் விலை போகும் நிலையில், ரமேஷ்பாயின் நெய் மற்றும் அதில் இருந்து தயராகும் பொருட்கள் 3 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து, 2 லட்சம் வரை அமெரிக்கா, கனடா, சவுதி அரேபியா போன்ற 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகி வருகிறது.
தற்போது கரனோவின் தாக்குதலுக்குப் பிறகு, பலரும் கலப்படம் அல்லாத உணவு பொருட்களுக்கு மக்கள் அவர்களின் பார்வையை திருப்பியுள்ளனர். இன்றைய காலகட்டங்களில் பாலில் கூட கலப்படம் வந்துவிட்ட நிலையில், ரமேஷ்பாய் சுத்தமான முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் வியாபாரம் செய்து வருவது மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:ஏலக்காய் போதும்: எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும்!