தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’ரசிகரின் கடைசி விருப்பம் நிறைவேற்றம்’; நடிகர் விஜய் தேவர்கொண்டா இரங்கல் பதிவு வைரல்! - ரசிகரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றிய விஜய் தேவர்கொண்டா

அர்ஜுன் ரெட்டி நட்சத்திரம் விஜய் தேவர்கொண்டா, கோவிட் - 19னால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற காணொலிக் காட்சியில் பேசினார். மறைந்த தனது ரசிகருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இதுகுறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட விஜயின் பதிவு பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

நடிகர் விஜய் தேவர்கொண்டா இரங்கல் பதிவு வைரல்
நடிகர் விஜய் தேவர்கொண்டா இரங்கல் பதிவு வைரல்

By

Published : May 2, 2021, 6:29 PM IST

தெலுங்கு நட்சத்திர நடிகர் விஜய் தேவர் கொண்டா வெளிப்படுத்தாத அவரது உணர்ச்சிப்பூர்வமான பக்கமொன்று தற்போது தெரியவந்துள்ளது. விஜய் தன்னை தெலுங்கு திரையுலகில் தன்னை ஒரு கிளர்ச்சியாளராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் தனது ரசிகர் ஹேமந்த் என்பவருக்காக பதிவிட்ட உணர்ச்சிவசப்பட வைக்கக் கூடிய பதிவை தற்போது பகிர்ந்துள்ளார். அது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற சனிக்கிழமை விஜய் தனது ரசிகர் ஹேமந்த் உடன் உரையாடிய காணொலி காட்சி ஸ்கிரீன் ஷாட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். விஜயின் ரசிகர்களே ஹேமந்தின் கடைசி விருப்பத்தை அவரிடம் கொண்டு சேர்த்துள்ளனர். அதுவே கோவிட் -19 காரணமாக இறந்த சிறுவனின் முகத்தில் சிரிப்பை வெளிக்கொணர காரணமானது.

இதுகுறித்து விஜய் சமூக ஊடகங்களில் ஒரு இதயப்பூர்வமான குறிப்பை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ஐ மிஸ் யூ ஹேமந்த். நாங்கள் பேசியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் உங்கள் இனிமையான புன்னகையைப் பார்க்கவும், உங்கள் அன்பை உணரவும், உங்களுக்கு சிலவற்றைக் கொடுக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என் கண்களில் கண்ணீருடன் சொல்கிறேன், நான் இப்போதே உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். என்னை அணுகி, இனிமையான இந்த சிறுவனுடன் என்னை இணைத்த அனைவருக்கும் நன்றி. நீங்களும் ஹேமந்தைத் தவறவிடுவீர்கள்! இந்த நினைவு எனக்கு வேண்டும். நீங்கள் என் காலவரிசையில் என்றென்றும் வாழ வேண்டும்” என பதிவிடப்பட்டுள்ளது.

விஜய், ஹேமந்த் இடையேயான காணொலிக்காட்சி உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் அர்ஜூன் ரெட்டியில் வரும் ரவுடி கதாபாத்திரத்தின் டி-ஷர்ட் கோருகிறார். வேறு ஏதாவது வேண்டுமா என விஜய் அவரிடம் கேட்டபோது, ”கோவிட் இல்லையென்றால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்" என ஹேமந்த் பதிலளித்தார்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் மற்றொரு வீடியோவில் ஹேமந்த் விஜயிடமிருந்து வெறும் ஒரு டி-ஷர்ட் மட்டும் பெறாமல், மூன்று டி-ஷர்ட்கள், ஒரு கூடை பழங்களை அவரிடமிருந்து பெற்றார் என்பது தெளிவாகிறது. சமூக ஊடகங்களில் நடிகர் காட்டிய இந்த இரக்க குணமிக்க செயல் பாராட்டப்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் அவரை ’தங்க இதயம்’ கொண்ட மனிதர் என அழைக்கின்றனர். மேலும் ஹேமந்தின் கடைசி நொடிகளில் சந்தோஷத்தை பரப்பியதற்கு நன்றி எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details