லக்னோ: உத்தரப் பிரதேச மாநில அரசுநிகழ்நேர விழிப்பூட்டல்கள் மூலம் தற்கொலைகளை தடுத்து சமூக வலைதள செயலி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் யாரேனும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டால், அந்த தகவல் தானாகவே அம்மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று தற்கொலையில் ஈடுபடுபவர்களை காப்பாற்றப்படுவார்கள்.
அந்த வகையில், லக்னோவில் 29 வயது இளைஞர் நேற்று (செப் 8) தற்கொலைக்கு முயற்சித்த போது, அதனை அறிந்த ஃபேஸ்புக் செயலி, உடனடியாக லக்னோ போலீசாருக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியது. இந்த செய்தியின் அடிப்படையில், போலீசார் அந்த இளைஞரின் வீட்டிற்கு விரைந்து சென்ற உயிரை காப்பாற்றினர்.