தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Exclusive:பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா!

அனைத்து மாநிலங்களிலும் உள்ள பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள், நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.

Arjun
Arjun

By

Published : Jul 2, 2022, 1:32 PM IST

ஹைதராபாத்: பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் இன்று(ஜூலை 2) தொடங்கியது. ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆளும் 19 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்தத்தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கட்சியின் விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்த மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, "அனைத்து மாநிலங்களிலும் உள்ள பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள், நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் திரௌபதி முர்மு, தெலங்கானாவில் யஷ்வந்த் சின்ஹா...!

ABOUT THE AUTHOR

...view details