தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கே.சி.ஆர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் எடாலா

அன்மையில் பதவிப்பறிப்புக்கு ஆளான தெலங்கான ராஷ்டிரிய சமதி கட்சியின் முன்னாள் அமைச்சர் எடாலா ராஜேந்தர் அக்கட்சியிலிருந்து விலகினார்.

எடாலா ராஜேந்தர்
எடாலா ராஜேந்தர்

By

Published : Jun 4, 2021, 4:24 PM IST

தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் எடாலா ராஜேந்தர். இவர் மீது கடந்த மே மாதம் மேடக் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நில அபகரிப்பு புகார் அளித்தனர். அவரிடம் இருந்து அமைச்சர் பொறுப்பை பறித்த மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ், இந்த புகார் தொடர்பாக விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.

டாடா காட்டிய எடாலா ராஜேந்தர்

இந்த விவகாரம் தொடர்பாக விசரணை நடைபெற்றுவரும் நிலையில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமதி கட்சியிலிருந்து விலகுவதாக எடாலா ராஜேந்தர் அறிவித்தார். கட்சியில் 20 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த எடாலா, அண்மையில் தலைநகர் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்தார். இதனையடுத்து அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னுடன் சேர்ந்து மேலும் பல மூத்த தலைவர்களும் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக எடாலா ராஜேந்தர் புகைச்சலை கிளப்பியுள்ளார்.

இதையும் படிங்க:"நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா விற்கப்படும்" அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details