முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முன்னாள் தலைவருமான தேவகௌடாவுக்கு (87) கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது குறித்து தனக்கும், தனது மனைவி சென்னம்மாவுக்கும் கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், இருவரும் மணி பால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், கட்சியினர் எந்தவித பதற்றமும் அடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.