பெங்களூரு: கர்நாடக மாநில அரசின் ராஜ உத்சவ விருது பெறுபவர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல துறைகளை சார்ந்த சாதனையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. 67 ஆவது ராஜ உத்சவ விருது விழா என்பதால் 67 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
67-வது கன்னட ராஜ்யோத்சவ் விழாவை முன்னிட்டு, கர்நாடக மாநில அரசு முக்கிய எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் என 67 பேருக்கு ராஜ்யோத்சவ் விருதுகளை அறிவித்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன், மூத்த இலக்கியவாதி ஆ.ரா. மித்ரா, பேராசிரியர் கிருஷ்ண கவுடா, ஆங்கில கால்வாயை நீந்திய பாராலிம்பிக் விளையாட்டு வீரர் ராகவேந்திரா அன்வேகர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மதன் கோபால், சோலிகா சமுதாயத்தில் ஒத்துழைப்பை வெளிப்படுத்திய மாதம்மா, மூத்த திரைப்பட நடிகர்கள் தத்தண்ணா, அவினாஷ் உள்ளிட்ட 67 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.