தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @9 AM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9 AM
9 AM

By

Published : Sep 21, 2021, 9:13 AM IST

1.'எழுவர் விடுதலையை திமுக நீர்த்துப் போகச் செய்துவிட்டதோ?'

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

2. 'மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் ஸ்டாலின்'

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்கு ஆகக்கூடிய கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. நீட் விவகாரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் தலைகீழ் மாற்றம்

நீட் தேர்வு நடைமுறைக்குப் பின்னர் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜனின் அறிக்கை, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

4.ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

5.ஏரி, குளங்கள், கால்வாய்கள் 10 நாள்களில் தூர்வாரப்படும் - கே.என். நேரு

தமிழ்நாட்டிலுள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் 10 நாள்களில் தூர்வாரப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

6.சென்னை ஐஐடியில் எக்ஸ்கியூட்டிவ் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு

சென்னை ஐஐடியில் எக்ஸ்கியூட்டிவ் எம்.பி.ஏ. பட்டப்படிப்பானது வேலை செய்யும் வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு செப்டம்பர் 20ஆம் தேதிமுதல் அக்டோபர் 19ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

7.போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

இளைஞர்கள் மத்தியிலான போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் காணொலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டு, சென்னை காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

8.மருத்துவத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் - பிடிஆர்

மருத்துவ வசதிகளை ஏழை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் எனத் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

9.குஜராத் ஹெராயின் விவகாரத்தில் திருப்பம்: சென்னைவாசிகள் இருவர் கைது

குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் இருவரும் சென்னைவாசிகள் எனத் தெரியவந்துள்ளது.

10.#HBD கதிர்: ரசிகர் மனத்தில் நின்ற ரசனை நாயகன்!

நடிகர் கதிர் இன்று தனது 29ஆவது பிறந்தநாள் கொண்டாடிவரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details