தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1pm news
1pm news

By

Published : Oct 26, 2021, 1:20 PM IST

1. தீபாவளிக்கு முன் பொருள்களை பெற முடியாதவர்கள் நவ. 8ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு

தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு ரேஷன் கடைகளில் பொருள்களை பெற முடியாதவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்கு பின் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2. முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (அக்.25) முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

3. கேலிக்குள்ளான முகம்மது ஷமி.. கை கொடுக்கும் ராகுல் காந்தி..!

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் முகம்மது ஷமி, இணையதளவாசிகளால் வறுத்தெடுக்கப்பட்டு கேலிக்குள்ளாக்கப்பட்டார்.

4. ரஜினிகாந்த் உறவினர் மீது பெண் புகார்!

ரஜினிகாந்த் உறவினர் மீது பெண் ஒருவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

5. ஏடிஎம் மூலம் இனி பணம் திருட முடியாது!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இல் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுப்பவர்கள் பதிவு செய்த மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணையும் பதிவிட வேண்டும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

6. விருது இரண்டு, இயக்குநர் ஒன்று- வெற்றிமாறன் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மேடையில் தனக்கும் தேசிய விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

7. தீபாவளி ராக்கெட் போல் உயரும் தங்கம் விலை!

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8.நாட்டில் புதிதாக 12,428 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 428 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

9. மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!

தனது மகள் சௌந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் எனும் குரல் சார்ந்த சமூக வலைதள செயலியை, நடிகர் ரஜினிகாந்த் தொடங்கிவைத்தார்.

10. ரசிகர்களை நோக்கி பாயும் தோட்டா மேகா!

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details