தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - ஒரு மணி செய்தி

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1PM
1PM

By

Published : Oct 13, 2021, 1:26 PM IST

1.'இந்தப் படை ஒன்றே வெல்லும் படை' என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்ட உ.பி.க்களே!

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி எனவும், 'இந்தப் படை ஒன்றே வெல்லும் படை' என்பதை நிரூபித்துக் காட்டிய திமுகவினருக்கும் நன்றி என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

2. உத்ரா கொலை வழக்கு: கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளாவில் பாம்பைப் பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாகக் கொலைசெய்த வழக்கில், அவரது கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. கலவரம் வெடிக்க வாய்ப்பு - எச்சரிக்கும் காங்கிரஸ்!

சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யாவிட்டால் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ. பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

4.T23 புலி இருக்குமிடம் கண்டறியப்பட்டது!

19 நாளாகத் தேடப்பட்டுவரும் T23 புலி தற்போது போஸ்பரா பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நம்பிகுன்னு வனப்பகுதியில் நடமாட்டம் இருப்பது தானியங்கி கேமராவில் பதிவானதையடுத்து வனத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

5. உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயமில்லை

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் (பிஎச்டி) கட்டாயம் என்பதிலிருந்து வரும் 2023ஆம் ஆண்டு வரை விலக்கு அளித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

6.புத்தொளி பெறும் பள்ளிக் கல்வி - இது தமிழ்நாட்டில் முதல் முறை

தமிழ்நாட்டில் முதல் முறையாக அனைத்துப் பணியிடங்களும் காலியாகக் காண்பிக்கப்பட்டு 123 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

7. வாலியையும் நாகேஷையும் காப்பற்றியவர் ஸ்ரீகாந்த் - சிவக்குமார் உருக்கம்

ஆரம்ப நாள்களில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த கவிஞர் வாலி, நடிகர் நாகேஷுக்கு தன் கைகளால் சமைத்துப் போட்டு காப்பற்றியவர் ஸ்ரீகாந்த் என நடிகர் சிவக்குமார் தனது டைரி பக்கத்திலிருந்து உருக்கமான பதிவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

8. ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்ட தாய், மகள் மரணம்!

கோவில்பட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்தனர்.

9. லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் குழு

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உழவர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, குடியரசுத் தலைவரை இன்று (அக். 13) சந்தித்தது.

10. 'கண்ணான கண்ணே' - யூ-ட்யூபில் சாதனை படைக்கும் அஜித் பாடல்

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் யூ-ட்யூப் தளத்தில் சாதனை படைத்துவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details