தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @9 AM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9 AM
9 AM

By

Published : Sep 15, 2021, 8:47 AM IST

1. காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர்வரையில் 100 பேருக்கு அண்ணா பதக்கம்

காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 'அண்ணா பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

2.ஸ்டாலின் ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படுமா?

பத்து வருடங்களுக்குப் பின் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

3.மாணவச் செல்வங்களே இன்னுமொரு உயிர்பலி வேண்டாம்!

நீட் தேர்வு அச்சத்தால் இந்தாண்டு இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் மாணவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

4.”முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு விலக்கு வேண்டும்”

முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் , உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

5.உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- பாமக திடீர் அறிவிப்பு

நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.

6.வரதராஜபெருமாள் கோயிலுக்கு சொந்தமான 311.23 ஏக்கர் நிலங்கள் மாயம்!

உலக பிரசித்தி பெற்றகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 311.23 ஏக்கர் நிலங்கள் மாயமானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

7.டிக்கிலோனா சக்ஸஸ் மீட்- கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

டிக்கிலோனா வெற்றி விழாவில் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

8.மனு கொடுக்கவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆட்டோ வசதி- கரூர் ஆட்சியர் அசத்தல்

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவச ஆட்டோ வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

9.புத்தகத்தில் மட்டும்தான் பக்கிங்காம் கால்வாய் இருக்கும் - உயர்நீதிமன்றம் வேதனை

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் மட்டும்தான் கால்வாய் குறித்த பதிவுகள் இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

10.ஆட்டை வெட்டி அபிஷேகம் - ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்!

அண்ணாத்த பட போஸ்டருக்கு ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் செய்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details