தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - ETV BHARAT TAMIL NADU

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

ETV BHARAT TAMIL NADU TOP 10
ETV BHARAT TAMIL NADU TOP 10

By

Published : Jul 5, 2021, 3:08 PM IST

1. நீட் - ஏ.கே.ராஜன் குழு நியமனம் தொடர்பான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. ஐஐடி சாதிய பாகுபாடு விவகாரம்: மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஐஐடி ஒன்றிய அரசின் நிறுவனம் என இருந்து விடாமல், மாநில அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சென்னை ஐஐடியில் தொடரும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

3. நடிகர் சூர்யாவை குறி வைக்கும் பாஜக!

நீட் அநீதி, ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு என மக்களின் குரலாக ஒலிக்கும் நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜகவினர் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

4. 'நண்பர் பாஸ்வானின் பிரிவால் வாடுகிறேன்’ - பிரதமர் மோடி நினைவஞ்சலி!

ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவை போற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.

5.இயர் 1: ’நத்திங்’ நிறுவனத்தின் முதல் வயர்லெஸ் இயர்பாட்ஸ்!

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தகவல் சாதன தயாரிப்பு நிறுவனமான ‘நத்திங்’ தனது முதல் படைப்பான ட்ரூ வயர்லெஸ் இயர்பாட்ஸ் ‘இயர் 1’ஐ இந்தியாவில் வெளியிடவுள்ளது.

6.தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று (ஜூலை 5) சேலம், தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.அடுத்தடுத்து ஆற்றில் குதித்த பெண்கள்- உயிரை பறித்த போலி முகநூல் கணக்கு!

கேரளத்தில் சிசு உள்பட மூன்று பேரின் உயிரை போலி முகநூல் கணக்கு ஒன்று பறித்துள்ளது.

8. தயாரிப்பாளர் மீது இசையமைப்பாளர் கொலை மிரட்டல் புகார்!

இசைக் கோப்பினை கேட்டு மிரட்டுவதாக திரைப்படத் தயாரிப்பாளர் மீது படத்தின் இசையமைப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

9. டிவியில் நேரடியாக வெளியாகும் சமுத்திரக்கனியின் 'வெள்ளை யானை'

நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள 'வெள்ளை யானை' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

10. இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் சந்திப்பு: '#RC15' அப்டேட் விரைவில் வெளியீடு!

இயக்குநர் ஷங்கர் ராம் சரணை வைத்து புதிதாக எடுக்கவுள்ள திரைப்படம் குறித்தான அப்டேட் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details