தமிழ்நாடு

tamil nadu

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM

By

Published : Oct 20, 2021, 12:53 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1pm
1pm

1. மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்த ஸ்டாலினின் பக்கா பிளான்!

மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், 16 மாவட்டங்களில் 14 அமைச்சர்களைப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

2. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைப்போம் - பிரதமர் மோடி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 381 பேர் வெற்றி பெற்ற நிலையில் அவர்களை வாழ்த்த விரும்புவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

3.உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (அக்.20) பதவி ஏற்கவுள்ளனர் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

4. பெட்ரோல் ரூ.200 ஐ தாண்டினால் பைக்கில் 3 பேர் செல்ல அனுமதி...!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாயைத் தாண்டினால் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதி பெற்றுத்தரப்படும் என அம்மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

5. ஆளுநரை முதல் முறையாகச் சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 20) ஆளுநர் ஆர்.என். ரவியை முதல் முறையகச் சந்திக்க இருக்கிறார்.

6. 1,200 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி காவல் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்டது.

7. பாஜக ஒரு பாசிச கட்சி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

பெண்கள், கல்வி ஆகியவற்றிற்கு எதிரானது பாஜக என்றும், அக்கட்சி பாசிச உணர்வுடன் செயல்படுவதாகவும் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

8. கரோனா 3 வது அலையில் இருந்து தப்பியதற்கு காரணம் என்ன? - தமிழிசை விளக்கம்

அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்பியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

9.புதிய கட்சி தொடங்கும் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10. பாலு மகேந்திரா துணைவியாருக்கு இன்று பிறந்தநாள்

நடிகை மௌனிகா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details