தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்  tamilnadu news  tamilnadu latest news  top ten  top ten news  top ten news at 11 am  etv bharat  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்
செய்திச் சுருக்கம்

By

Published : Aug 5, 2021, 10:54 AM IST

1.உங்கள் இல்லம் நாடி வருகிறது 'மக்களை தேடி மருத்துவம்' - ஸ்டாலின் தொடங்கிவைப்பு

பொதுமக்கள் எளிதில் மருத்துவச் சேவைகளைப் பெற மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கிவைத்தார்.

2. தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூய பனிமய மாதா பேராலயத்தின் 439ஆம் ஆண்டு பெருவிழாவின் கடைசி நாளான இன்று (ஆக.05) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

3. பஞ்சாப் முதலமைச்சரின் ஆலோசகர் பதவியைத் துறந்த பிரசாந்த் கிஷோர்!

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களை உற்றுநோக்க வைத்துள்ளது.

4. மின்கசிவால் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

திருவெல்லிக்கேணி அருகே தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாடு கனிமவளத் துறை துணை மேலாளர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

5. ராஜ் குந்த்ரா பிணை மனு தள்ளுபடி!

ஆபாச காணொலி தயாரிப்பு விவகாரத்தில் கைதான தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, ரியான் தோர்பே ஆகியோரின் பிணை மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

6. தொடங்கியது 'குக் வித் கோமாளி 2' கொண்டாட்டம்

'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியின் கொண்டாட்ட விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7. HBD கஜோல்... கண்களால் கைது செய்த தங்கத் தாமரை மகள்!

2001ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி தன் முதல் குழந்தையை பெற்றெடுத்த கஜோல், கர்ப்ப காலத்தில் எடை கூடியதால் பெரும் கேலிக்கு உள்படுத்தப்பட்டார்.

8. 40 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா

ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

9. ஒலிம்பிக் மல்யுத்த போட்டி - அன்ஷு மாலிக் தோல்வி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் ரெபிசாஜ் வாய்ப்பில் இந்தியாவின் அன்ஷு மாலிக் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

10. டோக்கியோ ஒலிம்பிக்: வினேஷ் போகத் காலிறுதியில் போராடித் தோல்வி!

ஒலிம்பிக் தொடரின் 14ஆம் நாளான இன்று மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் போராடி தோல்வியடைந்தார்.

ABOUT THE AUTHOR

...view details