மேஷம்
இன்று நீங்கள் பல விதமான விஷயங்கள் மீது ஈர்ப்பு கொள்வீர்கள். ஆனால் மின்னுவது அனைத்தும் பொன்னல்ல என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள, அவர்களுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைகளுக்காக, நீங்கள் பரிசு பொருள் ஏதேனும் வாங்கும் சாத்தியம் உள்ளது.
ரிஷபம்
மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். எனினும் அவர்கள் தங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதனால் ஏமாற்றம் அல்லது வருத்தம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. நாளின் பிற்பகுதியில், வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும் வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
உங்கள் தினசரி பணியிலிருந்து சிறிது விலகி, ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுவதால் மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மதிய நேரத்தில் பணி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆனால், வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்பத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.
கடகம்
உங்கள் முயற்சிக்கான பலன்கள் கிடைத்து, சமூக அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உங்கள் கருணையான மனிதாபிமான நடவடிக்கைகள் இன்று வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இன்று பொழுதுபோக்கு அம்சங்களுக்காக நீங்கள் அதிகம் செலவழிப்பீர்கள். என்று வேலைப்பளுவுடன் கூடவே குதூகலமும் இருக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் உற்சாகமும் ஆற்றலும் அதிகம் இருப்பதால், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்ட வில்லை என்றால், சிறிது மனம் வருத்தம் அடைவீர்கள். நீங்கள் இன்று எடுத்துக் கொள்ளும் அனைத்து விஷயங்களிலும், நிதி நிலைமை குறித்து ஆராய வீர்கள்.
கன்னி
பொதுவாக இன்று பெண்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். மாலையில் இறுக்கமான உறவில் இருப்பவர்களுக்கு விருந்து கொடுக்கலாம். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நீங்கள் இனிமையாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு.
துலாம்
இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த ஆடையை அணிந்துகொண்டு தயாராக இருக்கவும். ஏனென்றால் பணியிடத்தில், உங்கள் மீது அனைவரும் கவனம் செலுத்துவார்கள். உங்கள் கடின உழைப்பு, செயல்திறன் ஆகியவற்றிற்கு நல்ல பலன் கிடைக்கும். சக பணியாளர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு உதவுவார்கள். இன்றைய கிரக நிலைகள் சாதகமாக உள்ளதன் காரணமாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்
இன்றைய தினத்தை பொருத்தவரை, விஷயங்கள் எப்படி தலைகீழாக மாறுகின்றன என்பதை நீங்கள் உணரலாம். நீங்கள் நம்பும் விஷயங்களை குறித்து மட்டும் பேசவும். இது, சச்சரவுகளை தவிர்க்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பழகும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு
உடன் பணிபுரிபவர்கள், பணியிடத்தில் உங்களது நேர்மறையான நடவடிக்கைகள் காரணமாக, பிசியாக இருப்பார்கள். இன்று பலரை நீங்கள் சந்திக்க கூடும் என்பதால், சமூகத்தில் பழகும் உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும். மாலையில், உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் தனிமையில் நேரம் செலவழிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மகரம்
வேடிக்கையாக பேசி அனைவரையும் மகிழ்விக்கும் உங்கள் திறன் மூலமாக, உங்களை சுற்றியுள்ள அனைவரையும் நீங்கள் சந்தோஷப்படுத்துவீர்கள். வருங்காலத்திலும் உங்களுடன் நேரம் செலவிடுவதை அவர்கள் விரும்புவார்கள். பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் உங்களது திறமையின் காரணமாக அனைவரையும் ஈர்ப்பீர்கள்.
கும்பம்
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, எதிர்பாராத ஒரு நாளாக இருக்கும். உங்களது போட்டியாளர்களால் உங்களது நடவடிக்கைகளை கணிக்க முடியாது. போட்டி அதிகமாக இருக்கும்போது, இந்த நிலை சாதகமாக இருக்கும். உங்களது நேர்மையான முயற்சிகள் பாராட்டப்பட்டு, பலன்கள் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விட்டதால், சிறிது ஓய்வு எடுத்து அடுத்த நாளுக்காக தயாராகவும்.
இதையும் படிங்க:TODAY HOROSCOPE: மார்ச் 17 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?