தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஜனவரியின் 2ஆம் வார ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..? - horoscope predictions

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஜனவரி மாதத்தின் இரண்டாம் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரையிலானவை.

WEEKLY HOROSCOPE
WEEKLY HOROSCOPE

By

Published : Jan 9, 2023, 6:27 AM IST

மேஷம்: இந்த வாரம் பொதுவான பலன் தரும் வாரமாக அமையும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுபினர்கள் மீது அன்பு கூடும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் மனைவியுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். வீட்டிற்கு புதிதாக ஏதாவது ஒன்றை வாங்குவீர்கள். இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் லாபம் வரலாம். வேலை செய்பவர்கள் கடினமாக உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். முதலாளியுடன் கவனமாக இருங்கள். இப்போது செலவுகள் கூடும், ஆனால் வருமானமும் நன்றாக இருக்கும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதிதாக ஏதாவது ஒரு திட்டத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கும். அதில் வெற்றியை பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். படிப்பில் ஆர்வம் காட்டினால் நல்ல பலனை பெறலாம். இந்த வாரம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். பழைய நோய்களில் இருந்து இந்த வாரம் விடுபடுவீர்கள். வாரத்தின் முதல் மற்றும் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்:இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த மன அழுத்தம் குறையும். மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் காதலியுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்படலாம், எனவே கவனமாக இருங்கள். வாரத் தொடக்கத்தில் நீங்கள் ஒரு நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவால் பணியில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பும், திறமையும் உங்களுக்கு வெற்றியை தரும். வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெறலாம். அதனால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்:இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிதமான பலனை தரும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் காதலியைப் புரிந்துகொள்வதில் சில சிரமங்களை சந்திக்கலாம். மாணவர்கள் இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கும், என்பதால் பதற்றமும் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வேலையில் நீங்கள் வலுவாக இருக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு, இந்த வாரம் வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளியின் ஒத்துழைப்பைப் பெறுவதன் மூலம் நீங்கள் வணிகத்தில் சிறப்பாக செயல்பட முடியும். உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வார ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சிறுசிறு பிரச்னைகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் பிரச்னைகள் தீரும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். காதலிப்பவர்கள் அவசரப்படுவீர்கள், இது ஒரு நல்ல விஷயம் அல்ல, ஆனால் உங்கள் காதலில் அன்பு அதிகரிக்கும். இதன் காரணமாக, உங்கள் உறவு வலுவடையும். நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றியை அடைவீர்கள். உங்கள் நம்பிக்கையும் வலுப்பெற வாய்ப்புள்ளது. வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் கடின உழைத்தால் நல்ல பலனை பெறுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கலாம், உங்கள் வார்த்தைகளை யாரும் குறை சொல்ல முடியாது. வியாபாரம் செய்பவர்கள், உங்கள் வியாபாரத்தை மேம்படுத்த நிறைய முயற்சி செய்வீர்கள். அதனால் வியாபரத்தில் நீங்கள் நேர்மறையான முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு, இந்த வாரம் மிகவும் வலுவாக இருக்கும். படிப்பில் வெற்றி பெறலாம். உடல்நிலை நன்றாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். அதனால் நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வாய்ப்புள்ளது. வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்:இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சோகமும் இருக்கும். ஆனால் உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்கள் இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் காதலியின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறலாம். இப்போது உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம், இது உங்கள் நிதி நிலையை பலவீனப்படுத்தலாம், எனவே அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் பலம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் நடிப்பு மக்கள் பார்வைக்கு வரலாம். வியாபாரம் செய்பவர்கள் இந்த வாரம் தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஆதாயம் பெறலாம். மாணவர்களுக்கு, இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புள்ளது, முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். பெரிய உடல்நலப் பிரச்னை எதுவும் ஏற்படாது நன்றாக இருக்கும். இருப்பினும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வார ஆரம்பம் தவிர மற்ற நேரம் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். குடும்பத்தில் சூழ்நிலைகள் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாரம் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடன் சண்டை வரலாம், எனவே கவனமாக இருங்கள். ஒருவருக்கொருவர் புரிந்துக் கொள்வதன் மூலம் உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கும். உங்களில் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்கினால் நல்ல பலம் பெறலாம். அவர்களின் வேலை மேம்படுத்துவதன் மூலம் வேலையில் உள்ள பிரச்னைகளைகள் தீரும். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும், இதன் காரணமாக வியாபாரத்தில் லாபம் வரலாம். முதலீட்டின் மூலம் பலனைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள். இந்த வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

துலாம்:இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பொதுவான பலனை தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் பிரச்னைகள் தீரும். வாழ்க்கைத் துணை எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிறரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும், இல்லையெனில் சில சிக்கலை சந்திக்க நேரிடும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் காதலியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற ஒரு இலக்கை உருவாக்க வேண்டும். இதன் காரணமாக, நீங்கள் வேலையில் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்வீர்கள். இதன் காரணமாக, நீங்கள் வியாபாரத்தில் சில புதிய திட்டத்தை உருவாக்குவதன் மூலம், வெற்றியடைவீர்கள். மாணவர்கள் மிகவும் கடினமாக படிக்க வேண்டும். எந்த வகையான குறுக்குவழியையும் தவிர்க்கவும். உடல்நிலை நன்றாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஜிம்முக்கும் போகலாம். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இந்த வாரம் சரியாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு தங்கள் காதலியுடன் நேரத்தை செலவிடுவீர்கள், மற்றும் கோயிலுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் அவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிய, நீங்கள் அவர்களுடன் மேலும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையாக இருப்பீர்கள். குடும்பத்தின் சூழ்நிலை சாதகமாக இருக்கும், இதன் காரணமாக உறவும் நன்றாக முன்னேறும். வாரத் தொடக்கத்தில் நீங்கள் ஒரு நீண்ட தூரம் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. வருமானம் நன்றாக இருக்கும். மதப் பணிகளில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். சில சிறிய செலவுகள் ஏற்படலாம். இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பால் வெற்றியடைவீர்கள், இதன் காரணமாக உங்களுக்கு பதவு உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் லாபம் ஆதிகரிக்கும். இந்த வாரத்தில், எந்தவொரு அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கடினமாக உழைத்தால், நல்ல பலனை பெற வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம், எனவே உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும் . இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு:இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் மட்டும் சில பிரச்னைகள் வரலாம். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏதேனும் பிரச்னை இருந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்பச் சூழல் உங்களை முன்னேறத் தூண்டும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நன்றாக இருக்கும். வியாபாரம் அல்லது வேலை என இரு துறைகளிலும் உங்கள் செயல்திறன் பாராட்டுக்குரியதாக இருக்கும். அதனால் நீங்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. உங்கள் எதிரிகளிடம் இருந்து கனமாக இருங்கள். மாணவர்களுக்கு, இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் படிப்பில் பின்தங்காமல் ஏற்படலாம், எனவே கவனமாக படிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட தேவையில்லை. இருப்பினும், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள், உங்கள் மனைவியுடன் எங்காவது செல்ல திட்டம் போடுவீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஒருவருக்கொருவரிடம் அன்பு அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கும். உங்கள் காதலியுடன் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். வாரத் தொடக்கத்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடுவீர்கள். இந்த பயணம் உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அது உங்களுக்கு பயனளிக்கலாம். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலை செய்யும் போது சில பிரச்னைகள் உருவாக்கும். கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு, இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கலாம். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடடுவீர்கள். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம்:இந்த வாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனைத் தரக்கூடும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் அன்பும் இருக்கும், அதே போல் வாக்குவாதங்களும் இருக்கும். இதற்கு, நீங்கள் உங்கள் மனைவியுடன் விட்டுக் கொடுத்து போக வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் காதலியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் இருவருக்கும் இடையில் அன்பு அதிகரிக்கும். வாரத் தொடக்கத்தில், சில கூடுதல் செலவுகளாலும், மன உளைச்சல்களாலும் நீங்கள் சிரமப்படுவீர்கள். இதிலிருந்து வெளிவர உங்களுக்கு வார இறுதி வரை ஆகலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் முழுப் பலனையும் பெறுவீர்கள், அதனால் பணியிடத்தில் உங்கள் நிலை மேம்படும். வியாபாரம் செய்பவர்களும் அரசாங்க வேலைக்கான டெண்டர் பெறலாம். அரசுத் துறையிலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். படிப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். உடல்நிலை நன்றாக இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். வார ஆரம்பம் சாதகமாக இருக்கலாம். குழந்தைகளால் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் மனைவியுடனான அன்பு சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவரை முழு மனதுடன் நீங்கள் நேசிப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். சிறிதளவு முயற்சியால் வெற்றியை அடையலாம். இந்த வாரம் வியாபாரிகள் வியாபாரத்திற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் கொஞ்சம் கடினமாக உழைத்தால், இனி வரும் காலங்களில் அதன் பலனைப் பெறலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பருவகால நோய்கள் வரலாம். நீங்கள் வழக்கத்தில் ஒழுங்காக இருந்தால், எந்த பிரச்னையும் இருக்காது. வாரத் தொடக்க நாள் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: ஜனவரி 9ஆம் தேதிக்கான ராசிபலன்

ABOUT THE AUTHOR

...view details