வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரத்தை வலுப்படுத்துவது குறித்து மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (நவ 11) ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவாரும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கோவிட் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது: "நாட்டில் உள்ள தகுதியான குடிமக்கள் யாரும் பாதுகாப்பு கவசமான கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விடுபடக்கூடாது என்பதை நாம் அனைவரும் கூட்டாக இணைந்து உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் வீடு வீடாக சென்று, மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாம் ஊக்குவிக்க வேண்டும்.
அனைவருக்கும் தடுப்பூசி உறுதி
தற்போது நாட்டில் உள்ள வயது வந்தோரில் 79 விழுக்காட்டினர் முதல் தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 38 விழுக்காட்டினர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள், இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.