நெல்லூர்: ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆனந்த சாகரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். ஆட்டோ ஓட்டுநரின் மகனான பிரதீப் அதே பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ராமி ரெட்டி பிரதாப் குமார் ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்போன் எண்களை கேட்டும், பிரியாணி, பீர் உள்ளிட்டவற்றை வாங்கித் தருமாறும் சீனியர் மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் பிரதீப்பை தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பிரதீப்பிடன் போதிய பணம் இல்லாத காரணத்தால் மற்ற மாணவர்கள் எள்ளி நகையாடியதாகவும், பிரதீப்பின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு தொடர் தொந்தரவுகளை அளித்து வந்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்த போது யாரும் கண்டு கொள்ளவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.