ஐதராபாத்:டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை ஐதராபாத்தில் மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. நகரில் ராயதுர்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினர்.
முன்னதாக, கோகாபேட்டில் உள்ள ராமச்சந்திர பிள்ளையின் வீடு மற்றும் நானக்ராம்குடாவில் உள்ள ராபின் டிஸ்டில்லரீஸ் அலுவலகங்களில் ED சோதனை நடத்தியது. ராமச்சந்திர பிள்ளை ராபின் டிஸ்டில்லரீஸ் மற்றும் ராபின் டிஸ்ட்ரிபியூஷன்ஸ் எல்.எல்.பி என்ற பெயரில் நிறுவனங்களை நிர்வகித்தார்.