தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"தற்கொலை செய்து கொள் இன்சூரன்ஸ் தொகையை நான் பெற்றுக் கொள்கிறேன்" - மனைவியை மிரட்டிய கணவர் - tamil news

ஆந்திராவில் இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவியை தற்கொலை செய்ய வற்புறுத்தி, பின்னர் தனக்கு தெரியாமல் கணவன் மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் குறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனைவியை மிரட்டிய கணவன்
மனைவியை மிரட்டிய கணவன்

By

Published : Nov 25, 2022, 5:23 PM IST

டோர்னிபாடு: ஆந்திர பிரதேசம் நந்தியாலா மாவட்டம் சக்கரஜுவெமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரபாபு. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்கபுரத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் தனது திருமணத்தை மறைத்து தனது கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை மகேந்திரபாபு காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மகேந்திரபாபு தனது தாயிடம், இரண்டாவது மனைவி தற்கொலை செய்து கொண்டால், இறந்த பிறகு காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறி இரண்டாவது மனைவியை தற்கொலை செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், மனைவி அதை மறுத்ததால் அவரை விட்டுவிட்டு ஹைதராபாத் சென்றதாக, இரண்டாவது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சூழலில் தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மகேந்திர பாபு கிருஷ்ணா மாவட்டம் வக்கலகட்டா கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகேந்திரபாபுவின் மூன்றாவது திருமணம் குறித்து அறிந்த இரண்டாவது மனைவி, அவர் மீதும், அவரது தாய் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:"மனைவி வேண்டாம்... நிம்மதி வேண்டும்" - செல்போன் டவரில் ஏறி குடிமகன் ரகளை...

ABOUT THE AUTHOR

...view details