தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்முவில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இன்று மூன்று பேர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

encounter in J&K
encounter in J&K

By

Published : Aug 21, 2021, 9:11 AM IST

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அவந்திபோரா மாவட்டத்தில் உள்ள நாக்பேரன் ட்ராலின் வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலவலின் அடிப்படையில் அங்கு விரைந்த வீரர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதல்கட்ட தகவலில், கொல்லப்பட்டோர் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை, ஸ்ரீநகரில் உள்ள சிஆர்பிஎஃப் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். அதேபோல, குல்காமின் தேவ்சார் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சியின் தலைவர் குலாம் ஹசன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் குல்காம் மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஜாவேத் அகமது தார், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புல்வாமா என்கவுன்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details